Posts

பொத்துவில் ரஹ்மானிய்யா டவுன் பள்ளிவாசலின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் வைத்தல் நிகழ்வு எவ்வாறு நடாத்தப்பட்டிருக்க வேண்டும்?

 




பொத்துவில் ரஹ்மானிய்யா டவுன் பள்ளிவாசலின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் வைத்தல் நிகழ்வு எவ்வாறு நடாத்தப்பட்டிருக்க வேண்டும்? 


பொத்துவில் வர்த்தகர்கள், பள்ளி நிர்வாகத்தினர் தலைமையில் கண்ணியமிக்க உலமாக்கள் மற்றும் ஊர் பொதுமக்களும் சேர்ந்து ரஸூலே கரீம்  நபி பெருமானார் முஹம்மத் நபி  (ஸல்) அவர்கள் காட்டிய வழியில் இந்த  இறையில்லத்துக்கான அடிக்கல் நடப்பட்டு இருக்க வேண்டும்.

அந்நிகழ்வு ஒரு பெருநாள் போல் இருந்திருக்க வேண்டும்.


ஆனால் நேற்றைய தினம் பொத்துவில் டவுன் பள்ளி நிருவாகத்தினர் வக்பு சபை, கலாச்சார திணைக்களத்தின் எவ்வித அனுமதியும் பெறாமல் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் அரசியல் கட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை மாத்திரம் பின் வழியில் அழைத்து வந்து அடிக்கல் வைத்த நிகழ்வானது இந்த பொத்துவில் மண்ணின் சுய மரியாதையையும் சுய கௌரவத்தையும் கேலி செய்துள்ளது.


பள்ளி நிருவாகத்தினர், பொத்துவில் ஜம்மியத்துல் உலமா சபை போன்ற நடுநிலை மற்றும் இஸ்லாமிய நீதியை முழுமையாக நிலைநாட்ட வேண்டியவர்கள் இவ்வாறான பக்க சார்பாக பொறுப்பற்ற முறையில் இறையில்லங்களில் அரசியல் செய்து வருவது தடுக்கப்பட வேண்டும். 


பள்ளி நிர்வாகத்தினர் பகிரங்கமாக செய்யாமல் இப்தார் நிகழ்வு மாத்திரம் நடைபெரும் என்று சொல்லி விட்டு மறைத்து அடிக்கல் வைத்து இருப்பது அரசியலா? ஆண்மீகமா? என்பதை பொத்துவில் பொதுமக்களே தீர்மானிக்க வேண்டும் 


இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் உள்ளவர்கள்  உலமாக்கள் உட்பட அனைவரும் அரசியல்வாதிகளும் பகிரங்க நேரடி அரசியல் ஆதரவாளர்களும்.

Post a Comment